தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தை பற்றி தகவல்கள் ..
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் என்ன படம் என்ன மாதிரியான கதை என்று நமக்குள் ஒரு ஆர்வம் இருந்துகொண்டே இருக்கிறது இது சண்டை படமா இல்லை காதல் படமா இப்படி அது என்ன படம் என்று பாக்கலாம் வாங்க .
பிரான்ஸ் நாட்டில் பிரென்சு மொழியில் வெளியாகி, சுடச் சுட விற்றுத் தீர்ந்து, மடமடவென்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சரசரவென 36 நாடுகளில் சக்கைப்போடு போடும் நாவலைதான் ஹாலிவுட்டில் படமாக எடுக்கிறார்கள்.அந்த நாவலின் பெயர், ‘The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe’.இந்த நாவலில் இடம்பெற்றிருக்கும் மைய கதாபாத்திரத்தின் பெயர், ஆஜாஷத்ரு ஓகாஷ் ரத்தோட்.ராஜஸ்தானை சேர்ந்த இந்த ஆஜாஷத்ரு, தனக்கு மந்திர தந்திர வித்தைகள் தெரியும் என மக்களை நம்ப வைத்து ஏமாற்றுபவர். சொகுசாக வாழ முற்படுபவர்.ஒருநாள் தனக்கு முள் படுக்கை வேண்டும் என்று கிராமத்தினரை நம்ப வைக்கிறார். அந்த படுக்கை பிரான்சில் விற்கப்படுவதை அறிந்து அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.சிரமப்பட்டு சென்று வருவதற்கான விமான டிக்கெட்டை அந்த கிராமத்து மனிதர்கள் வாங்கித் தருகிறார்கள்.
பிரான்ஸ் வந்து சேரும் அஜாஷத்ருவிடம் இப்போது திரும்புவதற்கான விமான டிக்கெட் தவிர, நூறு யூரோ மட்டுமே இருக்கிறது. இந்த நோட்டும் ஒரிஜினல் அல்ல. கள்ள நோட்டு. ஒரு பக்கம் யூரோ அச்சிடப்பட்டிருக்கும். மறுபக்கம் வெறும் வெள்ளைத்தாள்.முள் படுக்கை விற்கும் கடை எதிர்பார்த்ததை விட பெரியதாக இருக்கிறது. மட்டுமல்ல அதன் விலையும், 115.89 யூரோ. கள்ள நோட்டை வைத்து கூட வாங்க முடியாத நிலை.உணவு வாங்கும் வரிசையில் தன் மேஜிக் கண்ணாடியை அணிந்தபடி நிற்கிறார். அவருக்கு முன்னால் நிற்கும் இளம் பெண், சட்டென்று திரும்ப கண்ணாடி உடைகிறது. அதாவது, தன் மேஜிக்கால் அந்த கண்ணாடி உடைந்து விட்டதை போல் அஜாஷத்ரு நாடகமாடுகிறார்.
பதறிப் போன அந்த இளம் பெண், அவருக்கு 20 யூரோவும் கொடுத்து உணவையும் வாங்கித் தருகிறாள்.இருவருக்கும் கண்டதும் காதல்.அந்த பெண் விடைபெற்று சென்றதும் கடைக்குள் சுற்றிச் சுற்றி வருகிறார். இரவு கடை மூடப்படும்போது கட்டிலுக்கு அடியில் படுத்து மறைந்து கொள்கிறார். கடை பூட்டப்பட்ட பிறகு ஜாலியாக அங்கும் இங்கும் எகிறி குதிக்கிறார்.யாரோ வரும் சத்தம் கேட்கிறது. உடனே அங்கிருக்கும் அலமாரிக்குள் மறைந்து கொள்கிறார்.
உள்ளே அஜாஷத்ரு இருப்பது தெரியாமல் அந்த அலமாரியை இங்கிலாந்துக்கு பேக் செய்து அனுப்புகிறார்கள். அங்கிருந்து ஸ்பெயின், இத்தாலி, லிபியா என பல நாடுகளுக்கு திருட்டுத்தனமாக பயணிக்கிறார்.அந்தப் பயணம் அகதி வாழ்க்கையின் கொடுமைகளை, துயரத்தை அவருக்கு உணர்த்துகிறது.
தனது ஏமாற்று வாழ்க்கையை கைவிட்டு தன் காதலியை மணந்து கொண்டாரா இல்லையா என்பதுதான் ‘The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe’ நாவலின் கதை.இந்த நாவலை அப்படியே படமாக எடுக்கப் போகிறார்களா அல்லது தழுவி உருவாக்கப் போகிறார்களா என்று தெரியவில்லை.ஆனால், அஜாஷத்ரு கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார் என்பது மட்டும் உண்மை.நகைச்சுவையும் சென்டிமென்ட்டும் கலந்த இந்தப் படம் (நாவல்) சமகால அரசியலையும் பேசுகிறது என்பதால் சர்வதேச அளவில் வாகை சூடும் என்கிறார்கள்.சொல்வதற்கில்லை. தனுஷ் ஆஸ்கர் விருதும் பெறலாம். எதற்கும் அட்வான்ஸ் வாழ்த்துகளை சொல்லி வைப்போம்.


0 comments: